இலங்கையில் முப்படை பாதுகாப்பு அடுத்த வாரம் நீக்கப்படும்
17 மார்கழி 2024 செவ்வாய் 16:32 | பார்வைகள் : 569
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முப்படையினரால் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை அடுத்த வாரம் முதல் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படுமென அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த பதினொரு மாதங்களில் முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பதற்காக 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், அது பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் செயலென அமைச்சர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசீலனை செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.