கொள்கை விளக்க உரை.. ஜனவரி 14 ஆம் திகதி அறிவிப்பார்!!
17 மார்கழி 2024 செவ்வாய் 16:55 | பார்வைகள் : 1144
பிரதமராக பதவியேற்றுள்ள பிரான்சுவா பெய்ரூ அவர்கள், இதுவரை தனது அரசாங்கத்தை அறிவிக்கவில்லை. பொது கொள்கை விளக்க உரையினை ஜனவரி 14 ஆம் அறிவிக்க உள்ளதாக தெஃரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமராக பொறுப்பேற்று நான்கு நாட்கள் ஆன நிலையில், இதுவரை தனது அமைச்சர்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில், இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதை அடுத்து, ஜனவரி 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவார் என தெரிவிக்கப்படுகிறது.