'ஒருசில மணிநேரங்களில்” Mayotte புறப்படுகிறார் மக்ரோன்!
17 மார்கழி 2024 செவ்வாய் 17:46 | பார்வைகள் : 1241
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அடுத்த சிலமணிநேரங்களில் Mayotte தீவுக்கு பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Mayotte தீவுக்கூட்டங்களில் வீசிய சூறாவளியினால் 22 பேர் கொல்லப்பட்டும், 1,373 பேர் காயமடைந்துள்ளதாகவும் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 200 பேர் உயிருக்கு போராடும் நிலையில், கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்த அனர்த்தத்தை “தேசிய பேரிடராக” அறிவித்திருந்தார். அத்தோடு விரைவில் அங்கு விஜயம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை அடுத்து, அடுத்த ஒருசில மணிநேரங்களில் அவர் Mayotte தீவுக்கு பயணிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.