Paristamil Navigation Paristamil advert login

டில்லியில் கடும் குளிர், பனி மூட்டம்; வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு

டில்லியில் கடும் குளிர், பனி மூட்டம்; வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு

18 மார்கழி 2024 புதன் 03:36 | பார்வைகள் : 169


டில்லியில் கடும் குளிர் மற்றும் பன மூட்டம் நிலவுகிறது. வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிந்ததால், குளிரை மக்கள் தாங்க முடியால் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.

டிசம்பர் மாதம் வந்தாலே, வட மாநிலங்களில் கடும் குளிர் வந்து விடும். அதன்படி வெப்ப நிலை குறைந்து குளிர் அதிகரிக்க துவங்கி விடுகிறது. டில்லியில் இன்று வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிந்ததால் அடர்த்தியான பனி மூட்டம் பல்வேறு பகுதிகளை மூடியது.

அலிபூர், ஆனந்த் விஹார், பவானா மற்றும் புராரி, தல்கடோரா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குளிரால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வீட்டிற்குள் முடங்கினர். வரும் நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 22ம் தேதி வரை வட மாநிலங்களில் பல பகுதிகளில் குளிர் நீடிக்கும். அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படாது. வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக இருக்கும்.

காலை மற்றும் பிற்பகல் வேளையில் மிதமானது முதல் அடர்த்தியான மூடுபனி காணப்படும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. கடுமையான குளிர் நிலவி வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்