Crit'Air 3 ஒட்டிகள் கொண்ட வாகனங்களுக்கு தடை!

18 மார்கழி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 11087
மூன்றாம் இலக்க Crit'Air ஒட்டிகள் கொண்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
’கிரான் பரி’ ( Grand Paris) பகுதிக்குட்பட்ட குறைந்த உமிழ்வு மண்டலப்பகுதியான (zone à faibles émissions - ZFE) இடங்களில் குறித்த வாகனங்கள் பயணிக்க தடை கொண்டுவரப்பட உள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட டீசல் வாகனங்களும், 2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பெற்றோல் வானங்களும் இந்த பட்டியலில் உள்ளன.
இந்த கட்டுப்பாட்டினால் அண்ணளவாக 420,000 வாகனங்கள் பாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து மொத்தமாக 131 பகுதிகளில் இந்த தடை நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1