பரிஸ் : கனரக வானத்தில் மோதுண்டு பெண் பலி!!

18 மார்கழி 2024 புதன் 08:00 | பார்வைகள் : 6107
கனரக வாகனம் ஒன்றில் மோதுண்டு பெண் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று டிசம்பர் 17, செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் பரிஸ் 16 அம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
பிற்பகல் 3 மணி அளவில் கனரக வாகனம் ஒன்று பாரம் தூக்கி ஒன்றை ஏற்றிக்கொண்டு Avenue Mozart வீதியில் பயணித்துள்ளது. அதன்போது வீதியினை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் வாகனத்துக்குள் சிக்குண்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அப்பெண், சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
அப்பெண்ணைக் கவனிக்கவில்லை என வாகன சாரதி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அவருக்கு மதுபான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் மதுபானமோ, போதைப்பொருளோ பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பலியான பெண் 58 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1