ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஸ்வின்.... ஓய்வு அறிவிப்பு!
18 மார்கழி 2024 புதன் 07:54 | பார்வைகள் : 140
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு அறிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், பெவலியனில் தன்னிடம் பேசிக்கொண்டிருந்த அஸ்வினை நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி கட்டியணைத்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 106 போட்டிகளில் 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மேலும் 116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளும் என மொத்தம் 765 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.