Paristamil Navigation Paristamil advert login

ரொறன்ரோவில் அதிகரிக்கும்  வேலைவாய்ப்பின்மை

ரொறன்ரோவில் அதிகரிக்கும்  வேலைவாய்ப்பின்மை

18 மார்கழி 2024 புதன் 09:50 | பார்வைகள் : 6066


கனடாவின் ரொறன்ரோவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் இவ்வாறு அதிகளவானோர் வேலைவாய்ப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

கடந்த நவம்பர் மாத புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

ரொறன்ரோவில் சுமார் 380000 பேர் தொழில் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி ரொறன்ரோவின் வேலையற்றோர் எண்ணிக்கையானது 8.1 வீதமாக காணப்படுகின்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் இவ்வாறு அதிக எண்ணிக்கையில் வேலையற்றோர் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது ரொறன்ரோவில் வேலையற்றோர் எண்ணிக்கை இந்த ஆண்டில் 1.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்