Paristamil Navigation Paristamil advert login

கதாநாயகியாகும் இலங்கையச் சேர்ந்த ஜனனி..?

கதாநாயகியாகும்  இலங்கையச் சேர்ந்த ஜனனி..?

17 மார்கழி 2024 செவ்வாய் 23:04 | பார்வைகள் : 3106


இலங்கையச் சேர்ந்த ஜனனி பிக்பாஸ் சீசன் 6ல் என்ட்ரி கொடுத்து தமிழ்நாட்டு மக்களிடையே பிரபலமானார். இதனை தொடர்ந்து விஜய் நடித்த லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, அதன் மூலம் ஜனனிக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு எதிர்காலத்திற்கான கதவு திறந்துள்ளது.

இந்நிலையில் ‛அறிவான்' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார் ஜனனி. ஹீரோவாக ஆனந்த் நாக் நடிக்க, பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கவுரி சங்கர், சரத்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அருண் பிரசாத் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. கிரைம் கலந்த திரில்லர் படமாக உருவாகி வருகிறது. ஜனனியின் புதிய பயணத்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

வர்த்தக‌ விளம்பரங்கள்