Paristamil Navigation Paristamil advert login

அடுத்த படம் குறித்து அட்லீயின் அதிரடி !

அடுத்த படம் குறித்து அட்லீயின் அதிரடி !

18 மார்கழி 2024 புதன் 11:49 | பார்வைகள் : 211


தமிழில் 'ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில்', ஹிந்தியில் 'ஜவான்' ஆகிய படங்களை இயக்கிய அட்லி, தற்போது 'பேபி ஜான்' என்னும் படத்தை தயாரித்துள்ளார். தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான இப்படம் டிச.,25ல் வெளியாகிறது. இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்து அட்லி கூறியதாவது: என்னுடைய ஆறாவது படத்துக்கு அதிக நேரமும் ஆற்றலும் தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட கதையை எழுதி முடித்து விட்டோம். கடவுள் ஆசிர்வாதத்துடன் விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்.

நடிகர்கள் தொடர்பான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். மிகப்பெரிய அளவில் உங்களை ஆச்சர்யப்படுத்துவேன். நீங்கள் முன்பே நிறைய விஷயங்களை ஊகம் செய்திருக்கிறீர்கள். ஆனாலும் உங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. நிச்சயமாக நாட்டுக்கு மிகவும் பெருமைக்குரிய படமாக அது இருக்கும். இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு துவங்குகிறது. எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மிகச்சிறந்த அறிவிப்புகள் உங்களைத் தேடி வந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

அட்லி இயக்க உள்ள புதிய படத்தில் சல்மான் கான், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்