தி.மு.க.,வை எதிர்த்தாலே சங்கி என்கிறார்கள்: அண்ணாமலை பேட்டி
18 மார்கழி 2024 புதன் 11:55 | பார்வைகள் : 237
இன்றைக்கு தி.மு.க.,வை எதிர்த்தால் அவர்களுக்கு கிடைக்க கூடிய பட்டம் சங்கி. அவர்களை எதிர்த்தாலே சங்கி என்கிறார்கள்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில், அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்களுக்கு தெரியும். அம்பேத்கர் பாதையில் உண்மையாக நடக்க கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி தான். அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டம், சிந்தனைகள் ஆகியவற்றை மக்கள் மன்றத்தில் வைத்து பா.ஜ., அரசியல் நடத்தி கொண்டு இருக்கிறது. இன்றைக்கு தி.மு.க.,வை எதிர்த்தால் அவர்களுக்கு கிடைக்க கூடிய பட்டம் சங்கி. அவர்களை எதிர்த்தாலே சங்கி என்கிறார்கள்.
சங்கி
சங்கி என்பதற்கு சீமான் ஒரு விளக்கம் கொடுத்தார். சங்கி என்றால் நண்பர் என்று பொருள். தி.மு.க.,வை யார் எதிர்த்தாலும் அவர்களை பா.ஜ.,வின் ஏ டீம், பி டீம், சி டீம் என்று பெயர் வைக்கிறார்கள். தி.மு.க.,வை எதிர்ப்பவர்களை எல்லாம் பா.ஜ.,வின் பி.டீம் என முத்திரை குத்துகின்றனர். எல்லா நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க.,வை எதிர்த்தால் அது பா.ஜ., தான்.
போதைப்பொருட்கள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து தவறாக ஏதும் பேசவில்லை. அம்பேத்கரை கவுரவிக்க காங்., எதுவும் செய்யவில்லை. அம்பேத்கருக்கு ஏன் தாமதமாக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்பதற்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும். போதைப்பொருட்களின் கூடாரமாகி விட்டது தமிழகம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.