மதுபோதை சாரதிகளை அடையாளம் காணும் A.I ரேடார் கருவி!!
18 மார்கழி 2024 புதன் 12:29 | பார்வைகள் : 1736
சாரதிகள் மதுபோதையில் அல்லது போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு வாகனங்களை செலுத்தினால் அவர்களை அடையாளம் காணும் நவின ரேடார் கருவிகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.
அவ்வாறான சாரதிகளை அடையாளம் காண்பதுடன், மகிழுந்து இலக்கத்தினையும், சாரதினையினையும் புகைப்படங்களாக்கி காவல்துறையினருக்கு தகவல் அனுப்பும் திறனும் இந்த புதிய ரேடார் கருவிகளுக்கு உள்ளது எனவும், செயற்கை நுண்ணறவு (A.I) மூலம் இந்த ரேடார் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆபத்தான சாரதிகளை அடையாளம் கண்டு, வீதி விபத்துக்களை தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த ரேடார் கருவிகள் சேவைக்கு வரும் திகதி அறிவிக்கப்படவில்லை.