புதிய தொடருந்துகளுடன் RER D..!!
19 மார்கழி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 951
RER D சேவைகளில் சில புதிய தொடருந்துகள் சேவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
பழைய தொடருந்துகள் அகற்றப்பட்டு, புதிய தலைமுறைக்கான நவீன வசதிகளுடன் கூடிய தொடருந்துகள் சேவைக்கு வந்துள்ளன. நேற்று டிசம்பர் 18 புதன்கிழமை இதனை இல் து பிரான்ஸ் பொதுப்போக்குவரத்து சபைத் தலைவர் Valérie Pécresse திறந்துவைத்தார். எவ்வாறாயினும், திறப்புவிழாவுக்கு இரு நாட்களுக்கு முன்னரே (டிசம்பர் 16) குறித்த புதிய தொடருந்துகள் சேவைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தொடருந்துகளைப் புதுப்பிக்க €3.75 பில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எட்டு தொடருந்துகள் தற்போது சேவைக்கு விடப்பட்டுள்ளன.
நாள் ஒன்றுக்கு 630,000 பயணிகள் RER D சேவைகளைப் பயன்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கது.