Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் சிக்கல்!

விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் சிக்கல்!

19 மார்கழி 2024 வியாழன் 05:18 | பார்வைகள் : 116


சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ், வில் மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்படும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சென்றனர்.

போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். 

இருவரும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவ்ரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா எற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் , வில் மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்படும் என நாசா தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து, 2025 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்