ஆப்பிரிக்க நாடுகளில் பாரிய புயல்...! நூற்றுக்கணக்கானோர் பலி
19 மார்கழி 2024 வியாழன் 08:27 | பார்வைகள் : 256
ஆப்பிரிக்க நாடான சிடோ புயலின் தாக்கத்தினால் மலாவியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. 'சிடோ' என பெயரிடப்பட்ட இந்த புயல், கிழக்கு ஆப்பிரிக்கா அருகே கடலில் நிலை கொண்டது.
இதன் தாக்கத்தினால் மலாவி நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்டை நாடான மொஸாம்பிக்கிலும் சிடோ புயல் தாக்கியதில் கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் மொஸாம்பிக்கில் புயல் தாக்கத்தினால் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து, தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக கூறப்பட்டுள்ளது.