சிறார்களுக்கும் ஆயுதப் பயிற்சிக்கு உட்படுத்தும் ஐரோப்பிய நாடு
19 மார்கழி 2024 வியாழன் 09:58 | பார்வைகள் : 428
ரஷ்யாவின் அடுத்த இலக்கு போலந்து என தகவல்கள் கசிந்துள்ளது.
இந்நிலையில் 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் தற்போது தாக்குதல் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை எவ்வாறு ஒன்று சேர்ப்பது மற்றும் இயக்குவது என்று பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.
சிறப்பு திட்டத்தின் அடிப்படையில், அதிகாரிகளின் கண்காணிப்பில் இந்தப் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
உக்ரைனில் 2022 பெப்ரவரி முதல் நடந்துவரும் போர் தொடர்பில் கவலை கொண்டுள்ள போலந்து தற்போது இந்த முடிவுக்கு வந்துள்ளது.
போலந்தின் பெரும்பாலான பாடசாலையில் தற்போது துப்பாக்கிப் பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், இப்படியான பயிற்சிகள் கட்டாயம் தேவை என்றே பாடசாலை ஆசிரியர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
கணிதம் மற்றும் வரலாற்றுடன் துப்பாக்கி சுடும் பாடங்களை எடுத்துக்கொள்ளும் மாணவர்களிடம் இது தொடர்பில் விசாரித்ததில், இது அருமையான வாய்ப்பு என பல மாணவர்கள் பதிலளித்துள்ளனர்.
போலந்தில் மொத்தம் 18,000 பாடசாலைகள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது லேசர் அடிப்படையிலான பயிற்சி தொழில்நுட்பத்தைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, போலந்து அரசாங்கத்தின் இந்த முடிவை பெற்ரோர்கள் பலரும் வரவேறுள்ளனர்.
14 வயது மாணவி ஒருவரின் தாயார் தெரிவிக்கையில், அவளுடைய எதிர்காலத்தைப் பற்றி அவள் சொந்தமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவள் என்று நான் உணர்கிறேன், மேலும் அவள் வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறாள் என்பதும் இதனால் தெரிந்துவிடும் என்றார்.
பொதுவாகவே, போலந்தில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை. உரிய காரணங்களை குறிப்பிட்டால், காவல்துறை அதிகாரிகளே ஆய்வு செய்த பின்னர் அனுமதி அளிக்கின்றனர்.