பரிஸ் : கழிவுகளைக் குறைக்க புதிய திட்டம்!!
19 மார்கழி 2024 வியாழன் 14:04 | பார்வைகள் : 786
பரிசில் சேரும் கழிவுகளை குறைப்பதற்கான சில திட்டங்களை பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது. இதன்படி 2030 ஆம் ஆண்டில் குப்பைகளை 10% சதவீதத்தால் குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஐந்து ஆண்டுகளில் பரிசில் உருவாகும் கழிவுகளில் 100,000 தொன் கழிவுகளை குறைக்க முடியும் எனவும், இது ஒரு மாதத்தில் பரிசில் குவியும் கழிவுகளில் இது 10% சதவீதம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பல்பொருள் அங்காடிகளில் கழிவுகளை அழிக்கும் இயந்திரங்களை நிறுவுதல், சிகரெட் மீதிகளை உடனடியாக அழிக்கும் கருவிகள் என மொத்தமாக 24 திட்டங்கள் இதில் கொண்டுவரப்ப உள்ளன.
பரிசில் வசிக்கும் நபர் ஒருவர் சாராசரியாக 433 கிலோ கழிவுகளை கொட்டுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.