Bondy : நோயாளியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ஒருவர் கைது!!
19 மார்கழி 2024 வியாழன் 17:32 | பார்வைகள் : 1339
இளம் நோயாளி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழர்கள் செறிந்துவாழும் Bondy (Seine-Saint-Denis) நகரில் உள்ள Jean-Verdier மருத்துவமனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மருத்துவமனையில் தாதியாக பணிபுரியும் 37 வயதுடைய ஒருவர், செவாய்க்கிழமை இரவு 9.30 மணி அளவில் 15 வயதுடைய பெண் நோயாளி சிறுமி ஒருவரது அறைக்குள் நுழைந்து அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். அச்சிறுமியின் தாயார் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலை அடுத்து, காவல்துறையினர் குறித்த தாதியரை கைது செய்தனர்.
குறித்த சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் இந்த பாலியல் வல்லுறவு தாக்குதலினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.