”என்னை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மக்ரோன் தயங்கினார்” - பிரதமர் பிரான்சுவா பெய்ரூ!
20 மார்கழி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1082
“என்னை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தயங்கினார்” என பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தெரிவித்தார்.
பிரதமராக பொறுப்பேற்று ஒரு வாரம் ஆன நிலையில், நேற்று டிசம்பர் 19 ஆம் திகதி வியாழக்கிழமை தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணல் வழங்கினார். அதன் போதே இதனை பிரதமர் குறிப்பிட்டார். “நீங்கள் குடியரசுத் தலைவர், நீங்கள் பல நெருக்கடிகளை எதிர்கொள்கிறீர்கள் (...) நீங்கள் யாரை Matignonல் (பிரதமர் அலுவலகம்) வைக்கப் போகிறீர்கள் என்பதைப் பற்றி சிந்திக்கவும் பல கருதுகோள்களுக்கு இடையில் தயங்கவும் உங்களுக்கு உரிமை இல்லையா?" என மக்ரோனிடம் தாம் தெரிவித்ததாக நேர்காணலில் குறிப்பிட்டார்.
அதேவேளை, அவர் எதிர்கொண்ட நெருக்கடிகளை களைய முயற்சி எடுப்பேன் எனவும், என்ன நடந்தாலும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் அரசாங்கம் அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் பெய்ரூ தெரிவித்தார்.