Paristamil Navigation Paristamil advert login

சீனா, கனடாவுடன்  ஐரோப்பிய ஒன்றியத்தை மிரட்டும்  ட்ரம்ப்

சீனா, கனடாவுடன்  ஐரோப்பிய ஒன்றியத்தை மிரட்டும்  ட்ரம்ப்

21 மார்கழி 2024 சனி 14:37 | பார்வைகள் : 743


ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இனி எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்காவை நாட வேண்டும் என்றும், மறுத்தால் வரி விதிப்பு உறுதி என்றும் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கார் மற்றும் உதிரி பாகங்கள் உட்பட பல்வேறு பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 

எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பெரும்பகுதி அமெரிக்காவில் இருந்தே இறக்குமதி செய்து வருகிறது.

அமெரிக்காவும் தனது திறன் அளவில் ஏற்றுமதி செய்து வருவதால், கூடுதல் தொகுதிகளுக்கு தற்போது ஏற்றுமதி வாய்ப்பில்லை என்றே வெளியான தரவுகளில் இருந்து தெரியவருகிறது.

ஆனால் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை மேலும் அதிகரிக்க இருப்பதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப்,

ஐரோப்பிய ஒன்றியம் தங்களின் எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறையை ஈடுசெய்ய அமெரிக்காவை நாட வேண்டும் என அவர்களிடம் தெரிவித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

இல்லை என்றால் வரி விதிப்பது உறுதி என்றும் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் ஐரோப்பிய ஆணையம் தெரிவிக்கையில், ஏற்கனவே வலுவான உறவை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து டொனால்டு ட்ரம்புடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

வெளியான தரவுகளின் அடிப்படையில், 2024 முதல் காலாண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எரிவாயு இறக்குமதியில் 47 சதவீதத்தையும், எண்ணெய் இறக்குமதியில் 17 சதவீதத்தையும் அமெரிக்கா ஏற்கனவே வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 20ம் திகதி ஜனாதிபதி பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப், சீனப் பொருட்களுக்கு 60 சதவீத வரி விதிப்பதோடு, அமெரிக்காவிற்கான உலகளாவிய இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.


ட்ரம்பின் இந்த அதிரடி முடிவால் அமெரிக்காவின் ஏற்றுமதி பாதிப்படையும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே, ஜெர்மன் மற்றும் இத்தாலிய கார் ஏற்றுமதிகள் தற்போது 2.5 சதவீத அமெரிக்க வரியை எதிர்கொள்கின்றன.

ட்ரம்ப் தனது வரி விதிப்பு முடிவில் உறுதியாக இருந்தால் அது நான்கு மடங்காக அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்