Yvelines : சிறைக்கைதி தப்பி ஓட்டம்!
21 மார்கழி 2024 சனி 18:09 | பார்வைகள் : 959
Yvelines மாவட்டத்தில் உள்ள prison de Poissy சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பி ஓடியுள்ளார்
கொலைக் குற்றம் ஒன்றுக்காக சிறைவைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவரே தப்பிச் சென்றுள்ளார். அவர் டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை காலை குறித்த சிறையில் இருந்து Pontoise, (Val-d'Oise) நகரில் உள்ள மொராக்கோ தூதரகத்துக்கு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அதன்போது அவருக்கு சிகரெட் புகைக்க சில நிமிடங்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். உடனடியாக அவரைக் கைது செய்ய முடியவில்லை. அவர் தலைமறைவாகியுள்ளார்.
அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகிறது.