Paristamil Navigation Paristamil advert login

காசாவில் பாடசாலை, மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் பாடசாலை, மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

22 மார்கழி 2024 ஞாயிறு 08:19 | பார்வைகள் : 2693


கடந்த 14 மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் காஸாவை தாக்கி வருகிறது.

காஸாவில் உள்ள பாடசாலை மற்றும் மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இரண்டு மருத்துவமனைகள் மற்றும் பாடசாலை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. 

கமால் அத்வான், அல் அவ்தா என்ற மருத்துவமனைகளே இந்த தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. 

முன்னதாக, ஜபாலியா அல்-நஸ்லாவில் உள்ள வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

காஸா-இஸ்ரேல் போரில் இதுவரை 45,000க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 107,573 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்