Paristamil Navigation Paristamil advert login

Free Mobile : தெரிந்த நிறுவனம்... தெரியாத தகவல்கள்!!

Free Mobile : தெரிந்த நிறுவனம்... தெரியாத தகவல்கள்!!

3 வைகாசி 2019 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18545


இன்றைய பிரெஞ்சு புதினத்தில், நாம் அனைவரும் அறிந்த Free Mobile நிறுவனம் குறித்து, தெரியாத சில தகவல்களை பார்க்கலாம்..!! 
2007 ஆம் ஆண்டு (ஜூலை 24) ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 13.441 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 
 
பிரான்ஸ் முழுவதும் வியாபித்திருக்கும் இந்த நிறுவனத்துக்கு, அதிகளவான வாடிக்கையாளர்கள் இருப்பது நமது பரிசில் தான். 
 
பிரான்சில் முதன் முறையாக 3G உரிமம் பெற்றது Orange நிறுவனம். அது நடந்தது 2000 ஆம் ஆண்டில்.  Bouygues நிறுவனம் 2002 ஆம் ஆண்டில் 3G க்கு மாற, இந்த பந்தையத்தில் இறுதியாக சேர்ந்தது free நிறுவனம். 2009 ஆம் ஆண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு 3G சேவையினை வழங்க ஆரம்பித்தது. 
 
3G உரிமத்துக்காக Free நிறுவனம் 240 மில்லியன் யூரோக்கள் பணம் செலுத்தியது. 
 
Roaming வசதிக்காக Orange நிறுவனத்துடன் 2011 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. அடுத்த வருடம் (2020) இந்த ஒப்பந்தம் நிறைவுக்கு வருகின்றது. 
 
2015 ஆம் ஆண்டுவரை 75 வீத நிலப்பரப்புக்கு தெள்ளத்தெளிவான 3G 'கவரேஜ்' கொண்டிருந்த Free, 2018 ஆம் ஆண்டின் ஜனவரியில் நாட்டின் 90% இனை அடைந்திருந்தது. 
 
2009 இல் 3G ஒப்பந்தம் போட்டுக்கொண்ட மூன்றாம் வருடம், 2011 இல் 4G சேவைகளுக்கான உரிமத்தை கைப்பற்றியது.
 
2012 ஆம் ஆண்டில் இரண்டு 'சலுகை'களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது... 'சரேல்' என வளர்ச்சிப்படியை எட்டிப்பிடிக்க காரணமாக அமைந்தது. 
 
2012 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் €2 களுக்கு 60 நிமிடங்களும்/ 60 குறுந்தகவல்களும் மேற்கொள்ளலாம் எனும் சலுகை வெகுவாக ஈர்த்தது. 
 
பின்னர் அதே ஆண்டின் இறுதியில், அதே €2களுக்கு 120 நிமிடங்களும்/ எல்லையில்லா குறுந்தகவல்களும் மேற்கொள்ளலாம் எனும் சலுகை, நிறுவனத்துக்கு பெரும் அஸ்திவாரமாய் ஆனது. 
 
இன்றைய திகதியில் பிரான்சில் பலருக்கு பிடித்த 'நெட்வொர்க்'காக மாறியுள்ளது Free!! 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்