Paristamil Navigation Paristamil advert login

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

18 கார்த்திகை 2024 திங்கள் 08:22 | பார்வைகள் : 343


பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

பெய்ரூட் விமான நிலையத்தின் அருகே இஸ்ரேல் இராணுவம் நவம்பர் 14 நடத்திய வான்வழித் தாக்குதலில் அப்பகுதிகளில் இருந்த கட்டடங்கள் தரமட்டமாகின.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களுக்குச் சொந்தமான இடங்களைச் சுற்றியுள்ள மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்திருந்தது.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே, ஹிஸ்புல்லா குழுக்களுக்குச் சொந்தமான இடங்களுக்கு அருகே இருப்பவர்கள் கவனத்திற்கு, கூடிய விரைவில் அப்பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தொடங்கவுள்ளது எனக் குறிப்பிட்டு, வரைபடத்தில் தாக்குதல் நடத்தப்படும் இடங்களையும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தெற்கு பெய்ரூட் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

பெய்ரூட் விமான நிலையம் அருகே ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதிகளில் இருந்த கட்டடங்கள் முழுவதுமாக சேதமடைந்தன. 

ஓடுபாதைகளில் விமானங்கள் சென்றுக்கொண்டிருக்கும்போதே ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது.

இதில் விமானங்கள் அவசரமாகத் திருப்பப்பட்டன. சுற்றியிருந்த கட்டடங்கள் முழுவதுமாக தரைமட்டமாகின. 

பெய்ரூட்டில் இஸ்ரேல் எல்லையிலிருந்து 3 கி.மீ. சுற்றளவிலுள்ள கட்டடங்கள் முழுவதுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் மக்களுக்கு எதிரான ஹிஸ்புல்லாக்களின் மறைமுகத் தாக்குதலைத் தகர்க்கும் நோக்கத்தில் இஸ்ரேல் ராணுவம் இதனைச் செய்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்