Paristamil Navigation Paristamil advert login

Pierre Chanal - மிக மோசமான கொலைகாரன்! - ஒரு வரலாறு!!

Pierre Chanal - மிக மோசமான கொலைகாரன்! - ஒரு வரலாறு!!

20 சித்திரை 2019 சனி 10:30 | பார்வைகள் : 18072


இப்பகுதியின் முந்தைய பகுதியினை படிக்க இங்கே அழுத்தவும்!!
********
 
மகிழுந்தின் ஜன்னல் கண்ணாடி இரத்தகறை காவல்துறையினரிடன் சந்தேகத்தை வலுப்படுத்த, விசாரணைகளை தொடர்ந்தனர். 
 
மகிழுந்துக்குள் இருந்து மேலும் சில பொருட்கள் சிக்கின.
 
சில காம விளையாட்டுப் பொம்மைகளும், ஆணுறைகளும், ஒரு கேமராவும் இருந்தது. கேமராவில் சில ஆண்களின் நிர்வான படங்கள் இருந்தது. 
 
தொடருந்து மகிழுந்தை சோதனையிட்டுக்கொண்டிருந்த காவல்துறையினருக்கு, மகிழுந்தில் பின் இருக்கைக்கு கீழே, பெட்ஷீட் ஒன்றினால் சுற்றப்பட்ட ஒரு பொதி கிடைத்தது.
 
திறந்தார்கள். 
 
அதனுள்ளே இருந்தது 20 வயது இளைஞன் ஒருவனது துண்டிக்கப்பட்ட தலை! 
 
உடனடியாக மேலதிக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, Chanal கைது செய்யப்பட்டார். மகிழுந்து மீட்கப்பட்டது. விசாரணைகள் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டது. 
 
விசாரணைகளின் முடிவில், மகிழுந்தில் மீட்கப்பட்ட துண்டிக்கப்பட்ட தலை, Palázs Falvay எனும் பெயருடைய 20 வயது இளைஞனது எனவும், குறித்த இளைஞன் Chanal இடம் 'லிஃப்ட்' கேட்டு மகிழுந்தில் ஏறியுள்ளான் எனவும், அவனை கடத்திச் சென்ற Chanal, இளைஞனை பாலியல் பலாத்காரம் செய்து, துன்புறுத்தி, தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளார் எனவும் தெரியவந்தது. 
 
காவல்துறையினர் ஆடித்தான் போயிருந்தனர். 
 
விசாரணைகளில் Chanal வாயை திறக்கவே இல்லை. நீண்ட நாட்கள் அவரை விசாரணைக்கு உட்படுத்திய காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பத்துவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. Dijon சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 
 
ஆனால் அதன் பின்னர் தான் காவல்துறையினர் ஒரு முக்கிய தகவலை கண்டுபிடித்தனர். 1980 ஆம் ஆண்டில் இருந்து Mourmelon மாகாணத்தில் கிட்டத்தட்ட எட்டு இளைஞர்கள் காணாமல் போயிருந்தனர். 
 
எங்கு தேடியும் அவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. 
 
அவர்கள் காணாமல் போனதுக்கும், Chanal க்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர். 
 
Mourmelon நகரம் ஜனத்தொகை சொற்பமான, மலைகள் கொண்ட நெருங்கிய காடுகள் கொண்ட ஒரு நகரம் என்பதால் விசாரணைகள் தாமதமானது. எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 
 
இதற்குள்ளாக பத்து வருடங்கள் விறு விறு என ஓட, Chanal, சிறையில் இருந்து விடுதலையானார். 
 
விடுதலையான கையோடு அவர் தலைமறைவாகிவிட்டார். 
 
ஆனால் விசாரணைகள் மட்டும் தொடர்ந்தன. 
 
மலையடிவாரம் ஒன்றில் இருந்து இளைஞனது சடலம் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டது.. சில மாதங்களில் பாதி எரிந்த மற்றுமொரு இளைஞனது சடலம் மீட்கப்பட்டது. 
 
அந்த சடலங்களுக்கும் Chanalக்கும் தொடர்புகள் இருபதாக உடற்கூறு தரவுகள் தெரிவித்தன. 
 
ஆனால் Chanalஐ தான் காணவில்லை. 
 
மொத்தமாக ஒன்பது இளைஞர்களின் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த Chanal, ஒக்டோபர் 15,  2003 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலம் மீட்கப்பட்டது. 
 
மீதமான சடலங்கள் குறித்து இன்றளவும் மர்மம் நீடிக்கின்றது..!! 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்