Madame de Brinvilliers - பிரான்சின் முதல் 'சீரியல்' கொலைகாரி!!
15 சித்திரை 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 17998
வரலாற்றுத் தடத்தில் பதியப்பட்ட முதல் 'சீரியல்' கொலைக்காரி குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்...!!
'Marie-Madeleine-Marguerite d'Aubray, Marquise de Brinvilliers' என மிக நீண்ட பெயரால் அறியப்படும் Madame de Brinvilliers எனும் சீரியல் கொலைகாரி, பிரெஞ்சு தேசத்தின் முதல் பெண் சீரியல் கொலைகாரியாக பதிவாகியுள்ளார்.
ஜூலை 22, 1630 ஆம் ஆண்டு பிறந்த இவர், பிரெஞ்சு உயர்குடியில் பிறந்தவர் ஆவர். காதலரால் ஏமாற்ற ஆத்திரத்தில் கொலைகாரி ஆனவர் தான் இவர்.
கண்மூடித்தனமான ஆத்திரமும், கொரூர எண்ணமும் விதைத்துக்கொண்ட இவர், அவரின் தந்தையான Antoine Dreux d'Aubray இனை விஷம் வைத்து கொலை செய்தார்.
பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் தனது இரு சகோதர்களையும் அதேபோன்று விஷம் வைத்து துன்புறுத்தி கொலை செய்தார்.
இந்த மூன்று கொலைகளையும் இவர் செய்திருந்தது காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சில மர்ம வழக்குகளும் முடிவுக்கு வராமல் இருந்தது.
குறிப்பாக, மருத்துவமனையில் நோய்வாய் பட்டிருக்கும் நோயாளிகளை காண இவர் அவ்வப்போது செல்வதுண்டு. அதற்கு இரக்க குணம் காரணமில்லை. நோயில் அவதிப்படும் நோயாளிகளை கண்டு இரசிக்க.
அதுபோல் நோயாளிகள் சிலரையும் இவர் மருத்துவமனையில் வைத்து கொலை செய்ததாக தகவல் உண்டு.
தீவிரமாக தேடப்பட்டு வந்த இவர், முதலில் பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு தப்பி ஓடினார். அங்கிருந்து நெதர்லாந்துக்குச் சென்றார்.
பின்னர் ஜெர்மனியின் Liège நகரில் வைத்து கைது செய்யப்பட்டு, பிரான்சுக்கு அழைத்துவரப்பட்டார்.
அவருக்கு பிரெஞ்சு சட்டம், தலை துண்டிக்கச் செய்து மரண தண்டனை நிறைவேற்றியது.
இன்றவளவிலும் அறியப்படும் முதல் 'தொடர் கொலைகாரி' இவர் என்பது குறிப்பிடத்தக்கது.