வெள்ளை மலை தீ விபத்து! - ஒரு வரலாற்றுச் சோகம்!! (இறுதி அத்தியாயம்)
12 சித்திரை 2019 வெள்ளி 11:30 | பார்வைகள் : 17967
மலையை குடைந்து போடப்பட்ட சுரங்கம் என்பதால், தீ வெபம் மலையின் உட்பகுதியை வெகுவாக பாதித்திருந்தது.
ஐந்து நாட்கள் ஆனது அதன் வெப்பத்தை தணிக்க...
இந்த தீ விபத்து உலகம் முழுவதும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியது. மனிதம் கண்டுபிடித்த இந்த நவீன வசதிகள் தான் பல இன்னல்களை கொண்டுவந்தது.
சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டு, தங்களை எப்படியேனும் காப்பாற்றி விடுவார்கள் என இறுதி நிமிடம் வரை காத்திருந்த இந்த மனிதகளைத் தான், இறுதி வரை காப்பாற்ற முடியாமல் போனது.
இந்த தீ விபத்து தொடர்பாக 16 பேரும், நிறுவனங்ககும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் யாரையுமே குற்றவாளியாக சட்டத்தினால் கருத முடியவில்லை.
சுரங்கப்பாதை, அடுத்த மூன்று வருடங்களுக்கு மூடப்பட்டது. திருத்தப்பணிகள் துரிதமாக இடம்பெற்றது.
முன்னரை விட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கண்காணிப்பு கருவிகளும், தானியங்கி தீயணைப்பு சாதனங்களும் பொருத்தப்பட்டன.
ஆனால், அதை சோதித்துப்பார்க்க இதுபோல் ஒரு தீ விபத்து மட்டும் வேண்டவே வேண்டாம்..!!
-முற்றும்.