வெள்ளை மலை தீ விபத்து! - ஒரு வரலாற்றுச் சோகம்!! (பகுதி 7)
11 சித்திரை 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 17846
வரலாற்றில் இப்படி ஒரு சுரங்கத்துக்குள் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறிந்திருக்க மாட்டீர்கள்.
மொத்தமாக 53 மணிநேரங்கள் சுரங்கத்துக்குள் தீ நீடித்தது. தீயினை அணைப்பதற்கு வழியே இல்லாமல் போனது.
இந்த தீ விபத்தில் சுரங்கத்துக்குள் நிலவிய அதிகூடிய வெப்பம் எவ்வளது தெரியுமா? 1,000 °C (1,830 °F) வெப்பம் நிலவியது. இதற்கு பிரதான காரணம் தீப்பற்றிய வாகனம் ஏற்றிச் சென்ற மாஜரின்..! கண்ணாபின்னா என எரிந்து தள்ளியுள்ளது.
ஏற்றிச் செல்லப்பட்ட மாஜரினின் அளவு 23,000 லிற்றருக்கு இணையான அளவு, இதனால் தீ 50 மணிநேரங்கள் அதாவது இரண்டு நாட்களுக்கும் மேலாக எரிந்து தள்ளியது.
தவிர, ஏனைய வாகனங்களுக்குள் இருந்த பல மில்லியன் பெறுமதியான 'கார்கோ' பொருட்களும் எரிந்து சாம்பலாகியது.
இந்த தீ விபத்தில் வாகனத்துக்குள் இருந்தவர்கள் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். வாகனத்தை விட்டு கீழே இறங்கி தப்பியோட முற்பட்டவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 37 பேரின் உயிரை காவுகொண்டது இந்த தீ விபத்து!!
ஆயிரம் செல்சியஸ் வெப்பம் என்றால், கணியுங்கள்.. உடல்களில் இருந்து எதையும் மீட்கமுடியவில்லை. எலும்புகளும் சாம்பல்களாக காற்றில் கலந்திருந்தது.
இந்த விபத்தில் இருந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியவர்கள் 12 பேர் மாத்திரமே!!
-நாளை!