Paristamil Navigation Paristamil advert login

இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து 3 வீரர்களை விடுவிக்கும் (SLC) தேர்வுக்குழு

இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து 3 வீரர்களை விடுவிக்கும் (SLC) தேர்வுக்குழு

19 கார்த்திகை 2024 செவ்வாய் 09:01 | பார்வைகள் : 135


நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் குசல் மெண்டிஸ், பாத்தும் நிசாங்க, கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோரை விடுவிக்க  இலங்கை கிரிக்கெட் (SLC) தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்கு மேற்கண்ட வீரர்கள் போதுமான கால அவகாசம் வழங்குவதற்காக தேர்வாளர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக SLC அறிவித்துள்ளது.

நுவனிது பெர்னாண்டோ, லஹிரு உதார, மற்றும் எஷான் மலிங்க ஆகியோர் மாற்று வீரர்களாக ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நவம்பர் 19 ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், ஞாயிற்றுக்கிழமை (17) நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் (DLS method) வெற்றியைப் பதிவு செய்ததால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி ஏற்கனவே தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.


அதன்படி, இலங்கை இறுதியாக நியூசிலாந்திற்கு எதிரான ODI ஜின்க்ஸை தகர்த்தெறிந்தது, நவம்பர் 2012 இற்கு பிறகு முதல் தொடரை வென்றது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்