Paristamil Navigation Paristamil advert login

அப்தெல்மாலிக் : போதைப்பொருள் கடத்தல் மன்னன் - சிக்கினார்!

அப்தெல்மாலிக்  : போதைப்பொருள் கடத்தல் மன்னன் - சிக்கினார்!

19 கார்த்திகை 2024 செவ்வாய் 09:16 | பார்வைகள் : 4199


Seine-Saint-Denis மாவட்டத்தில் கடந்த வாரம் ஆறு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் என தெரிவிக்கப்படும் அப்தெல்மாலிக்  (Abdelmalik K) என்பவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்தெல்மாலிக் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் உள்ளார். 2021 ஆம் ஆண்டு Gignac (Lot) நகரை ஊடறுக்கும்  A20 நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடி ஒன்றில் வைத்து 500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அதன்போது வாகன சாரதி கைது செய்யப்பட்டிருந்த போதும், குறித்த போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை. 

விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், அதன் பின்னணியில் அப்தெல் மாலிக் இருப்பதை தெரிந்துகொண்டனர். 

பின்னர் அவர் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்தவாரம் ஆறு பேர் கொண்ட குழுவை கைது செய்தனர். அவர்களில் அப்தெல் மாலிக் மற்றும் David S எனப்படும் மற்றுமொரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்