வெள்ளை மலை தீ விபத்து! - ஒரு வரலாற்றுச் சோகம்!! (பகுதி 6)

10 சித்திரை 2019 புதன் 10:30 | பார்வைகள் : 19980
ஒக்சிசன் குறைவால் தீ வேகமாக பரவியது. சாரதிகள் வாகனங்களில் பயணித்தவர்கள் வாகனத்தை விட்டு இறங்கி அங்கும் இங்குமாக ஓடினார்கள்.
ஆபத்து வேளையில், தீயில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு 600 மீற்றர் இடைவெளியிலும் ஒரு அறை அமைக்கப்பட்டிருக்கும். சிலர் அந்த அறைகளை தேடி அதனுள் பதுங்கிக்கொண்டனர்.
தீயினால் வாகனங்களின் டயர் வெடித்தது. வாகனங்களின் எரிபொருள் தாங்கி தீ பற்றி பெரும் பிரளயத்தை உண்டாக்கியது.
தீயணைப்பு படையினர் பலர் துரங்கத்துக்குள் குவிக்கப்பட்ட போதும், அவர்களாலும் எதுவும் செய்யமுடியாமல் போனது.
தீ ஒரு பக்கம், வெளியேற முடியாமல் அனல் காற்று ஒரு பக்கம். தீயில் சிக்கிக்கொண்டவர்களில் ஓலச்சத்தம், வாகனங்களின் வெடிப்புச் சத்தம்.. இது அத்தனையும் உள்ளே நடத்திக்கொண்டிருக்க, வெளியே வெள்ளை மலை எவ்வித அசமாத்தமும் இன்றி அமைதியாக இருந்தது.
பாரிய நெருபுக்கு எதிராக தீயணைப்பு படையினர் கடுமையாக போராடினர்.
ஐந்து மணிநேரங்கள் ஆயிற்று கடைசி தீயினை அணைத்து முடிக்க. அவசர அறைக்குள் பதுங்கிக்கொண்டவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களில் பலருக்கும் எரிவு காயங்கள் ஏற்பட்டிருந்தன.
சடலங்கள் மீட்கும் பணி ஆரம்பித்தது. யார் யார் சிக்கிக்கொண்டது, எத்தனை பேர் உயிரிழந்தார்கள் போன்ற எதுவுமே அப்போது கணக்கிட முடியவில்லை.
தீயணைப்பு படையினரிடம் இருந்த மின் விளக்குகளைத் தவிர, மீதி இடம் எல்லாம் இருட்டு!
-நாளை.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1