Paristamil Navigation Paristamil advert login

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் - டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் - டக்ளஸ்  தேவானந்தா நம்பிக்கை

19 கார்த்திகை 2024 செவ்வாய் 13:58 | பார்வைகள் : 6553


தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஈ.பி.டி.பி. கட்சியின்  அடுத்த கட்ட நகர்விற்கு சிறந்த வலுவூட்டலை தந்துள்ளது  என தெரிவித்துள்ள கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கம் குறித்த தெளிவூட்டல் மக்களுக்கு சரிவர வழங்கப்படாமையும், எமது கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பட்ட அவதூறுகளுமே பின்னடைவிற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்களை கட்சி செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் விமர்சனம்  சுயவிமர்சனம் செய்து திருத்திக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தை  நோக்கி இன்னமும் வலிமையுடன் பயணிக்க தயாராக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்,

ஈ.பி.டி.பி. கட்சியின் யாழ் மாவட்ட  அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன், கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஏனைய மவட்டங்களைச் சேர்ந்த கட்சிப் பிரதி நிதிகளும் கலந்துகொண்ட நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, மன வலிமையோடு எமக்கு வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்க நினைத்திருந்த மக்களுக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் தேர்தலுக்கு முன்னர் ஈ.பி.டி.பி. க்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்களுக்கு அப்பால், தேர்தலுக்கு பின்னரும் வெளியாகின்ற காழ்ப்புணர்வு மற்றும் போலிப் பிரசாரங்கள் குறித்த உண்மைகளை, நாடளாவிய ரீதியில் தெளிபடுத்த வேண்டிய கட்டாய கடமை  கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

மேலும் இது குறித்து தெரிவித்துள்ள ஈ பி டி பி யின் செயலாளர் நாயகம், டக்ளஸ் தேவானாந்தா,  அலைகள் அடித்தாலும், கார்முகில்கள் சூழ்ந்தாலும் எமது கடும் பயணம் ஒருபோதும் நிற்பதில்லை என்றும் எந்தப் பின்னடைவுகளும் ஓரடி பின்னால் ஈரடி முன்னால் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
 

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்