Paristamil Navigation Paristamil advert login

ஸ்வீடன் நாட்டில் உணவு தண்ணீர் சேமிப்பு தொடர்பில் உத்தரவு

ஸ்வீடன் நாட்டில் உணவு தண்ணீர் சேமிப்பு தொடர்பில் உத்தரவு

19 கார்த்திகை 2024 செவ்வாய் 14:08 | பார்வைகள் : 442


மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளதாக, உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை சேமித்துவைக்குமாறு ஸ்வீடன் நாடு தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

அமெரிக்கா தனது ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பயன்படுத்தலாம் என உக்ரைனுக்கு அனுமதி வழங்கியுள்ளதைத் தொடர்ந்து, சில நாட்களுக்குள் அவை பயன்படுத்தப்படும் என ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கான அனுமதி தொடர்பில் ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகிவருகின்றன. ஆனால், தாக்குதல்கள் வார்த்தைகளால் நடத்தப்படுவதில்லை. அவை அறிவிக்கப்படுவதும் இல்லை. ஏவுகணைகளே தங்களுக்காக பேசும் என்று கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.

ஆக, தனது ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பயன்படுத்தலாம் என அமெரிக்கா உக்ரைனுக்கு அனுமதி வழங்கியுள்ள விடயமும், சில நாட்களுக்குள் ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் என ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ள விடயமும், மூன்றாம் உலகப்போர் வெடிக்கக்கூடும் என அக்கம் பக்கத்து நாடுகளுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளன.

அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்ட சில மணி நேரத்துக்குள், ஸ்வீடன், சுமார் ஐந்து மில்லியன் எச்சரிக்கை துண்டுபிரதிகளை விநியோகித்துள்ளது.

அதில், உலகில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், அப்படி அணு ஆயுதம், உயிரியல் ஆயுதம் அல்லது ரசாயன ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்படும்பட்சத்தில், வான்வழித்தாக்குதல் நடத்தப்படும்போது எப்படி பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக்கொள்ளவேண்டுமோ அதேபோல செயல்படவேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பக்கத்து நாடான பின்லாந்து முதலான சில நாடுகளும், தத்தம் குடிமக்களுக்கு இதேபோல் எச்சரிக்கைகள் விடுத்துள்ள விடயம், உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்