Paristamil Navigation Paristamil advert login

இந்தியா - சீனா இடையே விரைவில் நேரடி விமான சேவை

இந்தியா - சீனா இடையே விரைவில் நேரடி விமான சேவை

19 கார்த்திகை 2024 செவ்வாய் 17:12 | பார்வைகள் : 3592


இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவையை விரைவில் துவங்குவது குறித்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.

இந்தியா - சீனா இடையே இயக்கப்பட்ட நேரடி விமான சேவை கோவிட் பரவல் காரணமாக 2020ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 2020ம் ஆண்டு ரோந்து செல்வது தொடர்பாக இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால், கோவிட் பரவல் முடிந்த பிறகும் விமான சேவை இதுவரை துவக்கப்படவில்லை. தற்போது இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து எல்லையில் இரு நாட்டு வீரர்களும் விலக்கி கொள்ளப்பட்டனர். முன்பு போல் ரோந்து பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையில் விமான சேவையை மீண்டும் துவக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. விரைவில் கைலாஷ் மான்சரோவர் யாத்திரை துவங்க உள்ள நிலையில், விமான சேவை துவங்குவது என்பது பக்தர்களுக்கு பலனளிக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்