Paristamil Navigation Paristamil advert login

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள பிரபல Café.. 33 ஆண்டுகளின் பின்னர் மூடப்படுகிறது!!

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள பிரபல Café.. 33 ஆண்டுகளின் பின்னர் மூடப்படுகிறது!!

19 கார்த்திகை 2024 செவ்வாய் 17:18 | பார்வைகள் : 4437


பரிசில் கடந்த 33 ஆண்டுகளாக பிரபலமாக இருந்த "Hard Rock Café" அருந்தகம், நேற்று நவம்பர் 18 ஆம் திகதி திங்கட்கிழமையுடன் நிரந்தரமாக மூடப்பட்டது.

அருந்தகம் மூடப்படுவதாக கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி அதன் நிர்வாகம் அறிவித்திருந்தது. 14 boulevard Montmartre எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த அருந்தகம் கடந்த சில ஆண்டுகளாக தீவிர பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. இந்நிலையில், 33 ஆண்டுகளாக இயங்கிவந்த இந்த அருந்தகம், நேற்றுடன் நிரந்தரமாக மூட்ப்பட்டது.

இதனால் 90 பேர் வேலை இழந்துள்ளதாகவும், அவர்களுக்கு இழப்பீடாக €2.5 மில்லியன் யூரோக்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்