Paristamil Navigation Paristamil advert login

இந்தியர்களிடம் ரூ.100 கோடி மோசடி: டில்லியில் சீனர் கைது

இந்தியர்களிடம் ரூ.100 கோடி மோசடி: டில்லியில் சீனர் கைது

19 கார்த்திகை 2024 செவ்வாய் 17:21 | பார்வைகள் : 3693


இந்தியர்களிடம் ரூ.100 கோடி மோசடி செய்த சீன நாட்டவரை டில்லியில் போலீசார் கைது செய்தனர்.

சுரேஷ் அச்சுதன் என்பவர் போலீசில் சைபர் கிரைம் மூலம் தன்னிடம் 43.5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்தார். அதில், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி மோசடி நடந்ததாகவும், பல தவணைகளில் பணத்தை பெற்று ஏமாற்றியதாகவும் புகார் கூறியிருந்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர். அதில் பல வங்கிக்கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டது தெரிந்தது. அதில் ஒரு வங்கிக்கணக்கை ஆய்வு செய்ததில், முன்ட்கா பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் பெயரில் அது செயல்பட்டது தெரியவந்தது. அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கண்டுபிடித்து விசாரணையை துரிதபடுத்தியதில் மோசடியில் ஈடுபட்ட பங் சென்ஜின் என்ற சீனரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததும், அவர் மீது ஆந்திரா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் 17 வழக்குகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்