சைபர் தாக்குதலுக்குள் சிக்கிய Auchan! - 500,000 வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு!!
19 கார்த்திகை 2024 செவ்வாய் 17:45 | பார்வைகள் : 698
பிரான்சின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடி சங்கிலியான Auchan நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. வாடிக்கையாளர்களின் தரவுகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
500,000 வாடிக்கையாளர்களின் விபரங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. அவர்களின் முதல் பெயர், இரண்டாம் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம், வீட்டு முகவரி, பிறந்த ஆண்டு திகதி, குறித்த அங்காடியினால் வழங்கப்பட்ட வாடிக்கையாளர் அட்டை விபரங்கள் போன்றன திருடப்பட்டுள்ளன.
அதேவேளை, வங்கி விபரங்களும், ரகசிய இலக்கங்களும் திருடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு போலியான மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள் போன்றன வரக்கூடும் எனவும் இதுதொடர்பில் விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.