வெள்ளை மலை தீ விபத்து! - ஒரு வரலாற்றுச் சோகம்!! (பகுதி 5)
9 சித்திரை 2019 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18049
சாரதிகள் நம்பி இருந்தது போல் ventilation என அழைக்கப்படும் புகையை சுறிஞ்சும் இயந்திரம் செயற்பட்டது.
புகை வேகமாக உறிஞ்சப்பட்டது.
இதற்குள்ளாக தீப்பிடித்த வாகனத்தினை எதுவும் செய்யமுடியாமல் போனதால் அது வேகமாக தொடர்ந்து எரிந்துகொண்டே இருந்தது.
புகை வேகமாக உறிஞ்சப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், தீயணைப்பு வாகனம் துரித கதியில் சம்பவ இடத்தினை நெருங்கிக்கொண்டிருந்தது.
ஆனால், அன்றைய நாளினை அத்தனை இலகுவாக கடவுள் வடிவமைக்கவில்லை.
வேகமாக புகை உறிஞ்சப்பட, உள்ளிருந்து ஒக்சிசனும் உறிஞ்சப்பட்டது.
ventilation இயந்திரம் ஒரு குத்துமதிப்பாக இயக்கப்பட்டதால், சுரங்கத்துக்குள் புகை அடங்கிய பின்னரும் அது இயங்கியது.
ஒக்சிசன் குறைந்ததும் வாகனம் வேகமாக தீப்பற்றி பாரிய சத்தத்துடன் வெடித்தது.
இதனால் பல சாரதிகள் தங்கள் வாகனத்தை விட்டு இறங்கி தப்பி ஓடினர்.
அங்கு நின்றிருந்த அனைத்து வாங்கங்களும் இயங்க மறுற்றதோடு, அதன் இயந்திரங்களும் பழுதடைந்தன.
பின்னர், அங்கு நின்றிருந்த அனைத்து வாகனங்களும் அடுத்ததுத்து தீப்பற்றியது.
உள்ளே தீயை அனைக்கச் சென்ற தீயணைப்பு வாகனமும் தீப்பற்றிக்கொண்டது.
தீ வேகமாக பரவியதால், உள்ளே இருந்த மின்சார கம்பிகள் எரிந்தன. அனைத்து விளக்குகளும் தொடர்பு சாதன கம்பிகளும் செயலிழந்தன. சுரங்கத்துக்குள் கடும் இருள் சூழ்ந்துகொண்டது!
-நாளை.