Paristamil Navigation Paristamil advert login

ரகுமான் - சாய்ரா பிரிவுக்கு காரணம் என்ன ?

ரகுமான் - சாய்ரா பிரிவுக்கு காரணம்  என்ன ?

20 கார்த்திகை 2024 புதன் 07:24 | பார்வைகள் : 2784


இசை புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, தனது கணவரை பிரியவுள்ளதாக அறிவித்துள்ளார்.  செவ்வாய் இரவு, பத்திரிகையாளர்களுக்கு அளித்த ஒரு அறிக்கையில் இந்த  திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த ஜோடிக்கு திருமணமாகி 29 ஆண்டுகள் முடிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள ஒரு அறிக்கையில், “திருமணமாகி பல வருடங்கள் கழித்து, தனது கணவர் திரு. ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை தான் எடுத்துள்ளதாக சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இந்த முடிவானது தங்கள் உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சில உணர்ச்சிபூர்வமான அழுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார் சாய்ரா. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், இந்த தம்பதியினருக்கு இடையே சிரமங்களும், தீர்க்க முடியாத இடைவெளியும் உருவாக்கியுது என்றும் கூறப்படுகிறது.

மேலும் பேசிய சாய்ரா, மிகுந்த வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் சாய்ரா வெளியிட்ட பதிவில் இந்த இக்கட்டான நேரத்தில் தங்கள் நிலையை புரிந்துகொண்டு மக்கள் அனைவரும் தங்களுக்கான தனிமையை கொஞ்சம் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார் அவர். 

இசை புயலுக்கு கடந்த 1995ல் தான் சாய்ராவுடன் திருமணம் நடந்து முடிந்தது. இருவருக்கும் நடந்த இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சியக்கப்பட்ட திருமணமாகும். சில வருடங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பங்கேற்ற ரகுமான் தனது திருமணம் குறித்து பேசுகையில், "திருமணத்தை பற்றிய யோசனை அப்போது எனக்கு இல்லை. எனக்கென்று ஒரு பெண்ணை தேடி செல்லவும் அப்போது தோணவில்லை. ஆகவே என் அம்மா பார்த்த பெண்ணை நான் திருமணம் செய்துகொண்டேன்" என்றார் அவர்.

“உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், எனக்கென மணப்பெண்ணைத் தேடிச் செல்ல எனக்கு நேரமில்லை. நான் ரங்கீலா, பம்பாய் போன்ற படங்களில் பிசியாக பணி செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு கட்டத்தில் எனக்கு திருமணம் செய்துகொள்ளலாம் என்று தோன்றியது. என் அம்மாவிடம் பெண் பார்க்க சொன்னேன். அப்படி நடந்தது தான் எங்கள் திருமணம்" என்றார் அவர். 

ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானுவின் வழக்கறிஞர்கள் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அவரது வழக்கறிஞர்,வந்தனா ஷா, அவர் சார்பில் ஆஜராகி வாதாடினார். இந்த தம்பதியினர் தங்கள் திருமண வாழ்க்கையில் கடந்த சில காலமாக உணர்ச்சிப்பூர்வமான சில சவால்களை எதிர்கொண்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்