Paristamil Navigation Paristamil advert login

வெள்ளை மலை தீ விபத்து! - ஒரு வரலாற்றுச் சோகம்!! (பகுதி 4)

வெள்ளை மலை தீ விபத்து! - ஒரு வரலாற்றுச் சோகம்!! (பகுதி 4)

8 சித்திரை 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 20167


அபாய ஒலி எழுப்பப்பட்டதும் பிரெஞ்சு பக்கத்துக்கால் நுழைந்த சில வாகனங்கள் திரும்பி வெளியேறிவிட்டது. ஏனைய வாகனங்கள் வெள்ளைப் புகைக்குள் சிக்கிக்கொண்டு செய்வதறியாது திகைத்தனர். 
 
இத்தாலியின் பக்கத்தில் அத்தனை பெரிய வாகனங்கள் ஒன்றும் இருந்திருக்கவில்லை. ஒரு 'வோல்வோ' ட்ரக் ஒருவழியாக சுகாகரித்துக்கொண்டு இந்த விபத்தில் இருந்து கடந்துவிட்டிருந்தது. 
 
துன்பம் என்னவென்றால் சுரங்கத்துக்குள் பிரெஞ்சு பக்கத்தால் சிக்கிக்கொண்ட அனைத்து வாகனங்களும் நீளமான கனரக வாகனம். அவற்றை சடுதியாக திருப்பிக்கொண்டு அங்கிருந்து வெளியேற முடியாமல் போனது. 
 
மூச்சுத்திணறலுக்குள் இருந்து தப்பிக்க சாரதிகள் தங்கள் வாகனங்களின் கண்ணாடிகளை இறுக்க பூட்டிக்கொண்டனர். 
 
அவர்கள் ஒன்றை தீர்க்கமாக நம்பி இருந்தனர். 'புகையை உறிஞ்சும்' இயந்திரம் அந்த சுரங்கத்துக்குள் பூட்டப்பட்டிருப்பதால் புகை சில நிமிடங்களில் வெளியேறிவிடும், தாம் தொடர்ந்து பயணிக்கலாம் என எண்ணியிருந்தார்கள். 
 
ஆனால் பிரச்சனை முன்னோக்கித்தான் சென்றுகொண்டிருந்தது. 
 
-நாளை.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்