Paristamil Navigation Paristamil advert login

உயர பறந்து மிரட்டலாக கேட்ச் செய்த இலங்கை கேப்டன்...!

உயர பறந்து மிரட்டலாக கேட்ச் செய்த இலங்கை கேப்டன்...!

20 கார்த்திகை 2024 புதன் 09:05 | பார்வைகள் : 2213


நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்  இலங்கை கேப்டன் அசலங்கா மிரட்டலாக கேட்ச் பிடித்தார். 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி பல்லேககேலேவில் நடந்தது.

நியூசிலாந்து முதலில் களமிறங்கியது. அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட்டுக்கு 112 ஆக இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 

நீண்ட நேரமாக மழை நிற்காததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இலங்கை அணி 2-0 என முழுமையாக தொடரை வென்றது. 

இப்போட்டியில் டிம் ராபின்சன் (9) அடித்த ஷாட்டை, எக்ஸ்ட்ரா கவர் திசையில் நின்றிருந்த இலங்கை கேப்டன் சரித் அசலங்கா (Charith Asalanka) உயர தாவி கேட்ச் பிடித்து மிரட்டினார்.       


 

வர்த்தக‌ விளம்பரங்கள்