Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : ஒருவர் அடித்துக்கொலை!

பரிஸ் : ஒருவர் அடித்துக்கொலை!

20 கார்த்திகை 2024 புதன் 10:03 | பார்வைகள் : 4425


பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய, காவல்துறையினரால் நன்கு அறியப்பட்ட Mounir C என்பவர் பரிசில் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

பரிஸ் 20 ஆம் வட்டாரத்தின் Cité de la Banane பகுதியில் இக்கொலைச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 1 மணி அளவில் rue des Amandiers வீதியில் வைத்து இரு நபர்கள் குறித்த நபரை சுற்றி வளைத்து தாக்குதல் மேற்கொண்டனர். இதில் குறித்த நபர் சம்பவ இடத்தில்லேயே கொல்லப்பட்டார்.

அவசரப்பிரிவின் முதலுதவி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் இரு தாக்குதலாளிகளும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

Mounir C எனும் குற்றவாளிக்கு கடந்த 2002 ஆம் ஆண்டில் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்