வெள்ளை மலை தீ விபத்து! - ஒரு வரலாற்றுச் சோகம்!! (பகுதி 3)

5 சித்திரை 2019 வெள்ளி 10:30 | பார்வைகள் : 21240
1999 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட 35 வருடங்களில் இந்த சுரங்கத்துக்குள் மொத்தமான 16 ட்ரக் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்திருந்தன என்பது வரலாற்று தகவல்.
கனரக வாகனத்தில் இருந்து தொடர்ச்சியாக வெள்ளைப்புகை வந்துகொண்டிருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த அவ்வாகனத்தின் சாரதி Gilbert Degrave, வாகனத்தை நிறுத்தினார். அப்போது வாகனம் மிகச்சரியாக சுரங்கத்தின் நடுப்பகுதியில் இருந்தது.
வாகனத்தை விட்டு கீழே இறங்கிய Gilbert Degrave, பின்னால் சென்று புகையை அணைக்க முற்பட்டார்.
அப்போது தான் ஆரம்பித்தது அந்த விபரீதம்.
வாகனம் திடீரென தீப்பற்றிக்கொண்டது. பின்னால் நின்றிருந்த Gilbert Degrave இனை <<குப்>> என தூக்கி வீசியது.
அவரால் மேற்கொண்டு தீயை அணைக்க முடியாமல் போனது. தவிர, அருகில் நிற்காமல் முடிந்தவரை அங்கிருந்து தப்பி ஓடவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.
இச்சம்பவம் பதிவானபோது நேரம் காலை 10:53.
இரண்டு நிமிடங்களுக்குள்ளாக, 10:55 மணிக்கு சுரங்க கண்காணிப்பாளர் அபாய ஒலி எழுப்பினார்.
உடனடியாக சுரங்கத்தின் இரு வழிகளுக்குள்ளும் புதிய வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
ஆனால் துரஷிட்டவசமாக 10 மகிழுந்துகளும், 18 ட்ரக் கனரக வாகனங்களும் பிரான்சின் பக்கம் நுழைந்திருந்தன.
அதாவது தீப்பற்றிய வாகனத்துக்கு பின்னால் நின்றிருந்த வாகனத்தின் எண்ணிக்கை இது.
-நாளை.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1