வெள்ளை மலை தீ விபத்து! - ஒரு வரலாற்றுச் சோகம்!! (பகுதி 2)
4 சித்திரை 2019 வியாழன் 11:30 | பார்வைகள் : 17998
1999 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 24 ஆம் திகதி.
பெல்ஜியத்தைச் சேர்ந்த கனரக வாகனம் ஒன்று, வாகனம் நிறைய கோதுமை மாவினையும், மாஜரீனையும் ஏற்றிக்கொண்டு, புரான்சில் இருந்து இத்தாலியை நோக்கி செல்லும் சுரங்கத்துக்குள் நுழைந்தது.
வாகனம் சில கிலோமீற்றர்கள் தூரம் பயணித்ததன் பின்னர், எதிர் திசையில் வரும் வாகனங்கள் விளக்குகளை விட்டு விட்டு ஒளிரச் செய்து சில சமிக்ஞைகளை காண்பித்தனர். குறித்த வாகனத்தி சாரதி, 'எதோ தப்பாகச் செல்கிறது' என கணித்தார்.
அதன் பின்னர் தான் அவர் ஒன்றை கவனித்தார். வாகனத்தின் பக்க கண்ணாடி மூலம் பின் பக்கமாக பார்த்தார்.
பின்னால் ஒரே வெள்ளை வெளேர் என புகை மூட்டம். சில அடி தூரத்துக்கு அப்பால் எதுவுமே தெரியவில்லை.
அடுத்த சில நிமிடங்களில், அப்புகை அவரது வாகனத்தின் பெட்டியில் இருந்து தான் வருகின்றது என்பதை உணர்ந்தார்.
அந்த நொடி வரை அது தீப்பற்றிக்கொள்ளவில்லை.
ஆனால் வாகனத்துக்கு பின்னால் எதுவுமே தெரியவில்லை. தனியே வெள்ளை புகை மாத்திரமே நீடித்தது.
சுரங்கம் என்பதால் வெளிக்காற்று உள்ளே நுழைய வாய்ப்பில்லை. புகையும் வேகமாக கலைந்து செய்ய வழி இல்லை. பின்னால் வந்த வாகனங்கள் குறித்த நிலை என்னவென்று சாரதியால் அப்போது உணரமுடிந்திருந்தது.
-நாளை.