வருடத்துக்கு 7 மணிநேரம் இலவசமாக வேலை செய்யவேண்டும்... செனட் சபையில் வாக்கெடுப்பு!

21 கார்த்திகை 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 5199
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் முழு மூச்சாக செனட் சபையில் விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்கு உள்ளாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ’தனி நபர் ஒருவர் வருடத்துக்கு ஏழு மணிநேரங்கள் இலவசமாக வேலை செய்ய வேண்டும்’ எனும் புதிய புதிய வரைவு செனட் சபை அங்கத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக பங்குதாரராக ஒவ்வொருவரும் மாறவேண்டும் என தெரிவிக்கப்பட்டு, சம்பளம் ஏதுமின்றி வருடத்துக்கு ஏழு மணிநேரங்கள் மேலதிகமாக உழைக்க வேண்டும் எனவும், இதனால் ஆண்டுக்கு 2.5 பில்லியன் யூரோக்கள் சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆதரவு வாக்கெடுப்பு நேற்று நவம்பர் 20 ஆம் திகதி புதன்கிழமை செனட் சபையில் இடம்பெற்றது. இதற்கு ஆதரவாக 216 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதனால் இந்த புதிய வரைவு சட்டமாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செனட் சபையை அடுத்து, பாராளுமன்றத்தில் இடம்பெற உள்ள விவாதத்தின் போது இவை மீண்டும் கலந்தாலோசிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.