இலங்கை பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக அசோக ரங்வெல தெரிவு

21 கார்த்திகை 2024 வியாழன் 05:34 | பார்வைகள் : 2807
புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு வைபவரீதியாக ஆரம்பமான நிலையில், பத்தாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் ஜனாதிபதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு அறிவித்தார்.
இதேவேளை, பிரதி சபாநாயகராக மொஹமட் ரிஸ்வி சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.
10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை (21) ஆரம்பமாகியது. இதன்போது, பிரதி சபாநாயகர் நியமிக்கப்பட்டார்.
புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.