Paristamil Navigation Paristamil advert login

வெள்ளை மலை தீ விபத்து! - ஒரு வரலாற்றுச் சோகம்!!

வெள்ளை மலை தீ விபத்து! - ஒரு வரலாற்றுச் சோகம்!!

3 சித்திரை 2019 புதன் 10:30 | பார்வைகள் : 18069


இந்த உலகம் பல்வேறு விபத்துக்களை கண்டுள்ளது. கடந்து வந்துள்ளது. ஆனால் தப்பிக்க வழியின்றி, எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டு, காப்பாற்றுபவர்கள் வருவார்கள் என இறுதி நிமிடம் வரை காத்திருந்து உயிரிழந்த ஒரு கோர விபத்து குறித்து இந்த தொடரில் பார்க்கலாம்...!!
 
அதற்கு முன்னர், 'வெள்ளை மலை' ஒரு அறிமுகம்...!! 
 
4,808.7 மீற்றர் உயரம் கொண்ட Mont Blanc மலை தான் Alps இல் உள்ள மிகப்பெரிய மலை. 
 
Mont Blanc என்றால் <<வெள்ளை மலை>> என அர்த்தம்.  இந்த மலை இத்தாலியின் Aosta Valley பகுதியிலும் பிரான்சின் Haute-Savoie பகுதியிலும் பாதி பாதியைக் கொண்டுள்ளது. 
 
இந்த மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. பிரான்சுக்கும் இத்தாலிக்குமான ஒரு முக்கிய போக்குவரத்து நெடுஞ்சாலையாகும். 
 
 Chamonix, (Haute-Savoie) நகரில் இருந்து  இத்தாலியின் Courmayeur, (Aosta Valley) நகர் வரை நீள்கிறது இந்த சுரங்கப்பாதை. 
 
மணிக்கு 50 தொடக்கம் 70 கி.மீ வேகம் வரை பயணிக்ககூடிய இந்த சுரங்க பாதை, இருவழி சாலைகளை கொண்டது. பிரான்சுக்குள் நுழையவும், வெளியேறவுமான இந்த சுரங்கத்துக்குள் ஒரு தடவை நீங்கள் நுழைந்தால், மறு தேசம் காணும் வரை உயிர்ப்பயம் ஆட்டிக்கொண்டே இருக்கும். 
 
பதினொன்றும் பாதி கிலோமீற்றரும் நீளம் கொண்ட (11.611KM)  இந்த சுரங்கத்தில் ஏற்பட்ட அந்த தீ விபத்து இன்றுவரையில் ஒரு மோசமான நிகழ்வாக கருதப்படுகிறது . 
 
39 பேர் பலியாக காரணமாக இருந்த அந்த விபத்து, நாளை...!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்