Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ் வீட்டில் இரண்டு காதல் ஜோடிகள் யார்... யார்

பிக் பாஸ் வீட்டில்  இரண்டு காதல் ஜோடிகள் யார்... யார்

21 கார்த்திகை 2024 வியாழன் 08:45 | பார்வைகள் : 482


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனிலும் ஒரே வாரத்தில் இரண்டு காதல் ஜோடிகள் உருவாகி உள்ளன. அதில் ஒன்று விஷால் - தர்ஷிகா ஜோடி. இவர்கள் இருவரும் கடந்த வாரம் நடைபெற்ற ஸ்கூல் டாஸ்க்கில் காதலர்களாக நடித்தனர். அப்போது தனக்கு விஷால் மீது ஒரு ஈர்ப்பு வந்ததாக கூறிய தர்ஷிகா, விஷாலிடமே அதை ஓப்பனாக சொல்லி, இருவரும் தற்போது ஜோடிப் புறாக்களாக பிக் பாஸ் வீட்டில் வலம் வருகின்றனர்.

அதேபோல் இந்த சீசனில் ஓடிக்கொண்டிருக்கும் மற்றொரு லவ் டிராக் ராணவ் - பவித்ரா ஜோடியின் காதல் கதை தான். இந்த காதலும் கடந்த வாரம் நடந்த ஸ்கூல் டாஸ்கின் போது தான் ஆரம்பமானது. இதில் ராணவ் தான் பவித்ராவை துரத்தி துரத்தி காதலித்து வருகிறார். ஆனால் பவித்ராவுக்கு ராணவ் மீது எந்தவித லவ்வும் இல்லை என அவரே ஓப்பனாக சொல்லிவிட்டார். நேற்று முன்தினம் ராணவ் கொடுத்த பூவை கோபத்தில் தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டார் பவித்ரா. இந்த இரண்டு காதல் ஜோடிகளால் பிக்பாஸ் எந்தளவுக்கு சூடுபிடிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்