பரிஸ் : மூதாட்டியை கட்டிவைத்துவிட்டு, €100,000 கொள்ளை!

21 கார்த்திகை 2024 வியாழன் 12:27 | பார்வைகள் : 7466
மூதாட்டி ஒருவரைக் கட்டி வைத்துவிட்டு, வீட்டில் இருந்து 100,000 மதிப்புள்ள நகைகள், பொருட்கள் போன்றவற்றை கொள்ளையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரிஸ் 6 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. வங்கி ஊழியர்கள் போன்று வேடமணிந்து வருகை தந்த கொள்ளையர்கள் சிலர், மூதாட்டியை கட்டிவைத்துவிட்டு இச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை அங்கு வருகை தந்த இரு போலி வங்கி ஊழியர்கள், மூதாட்டியின் வங்கி அட்டையை புதுப்பிக்க வேண்டும் என கூறியதுடன், மூதாட்டியின் விபரங்களை சேகரித்ததோடு இல்லாமல், ”நாளை புதன்கிழமை எங்களது வங்கி ஊழியர்கள் வருகை தந்து புதிய அட்டையை தருவார்கள்’ என நம்பிக்கையாக தெரிவித்துள்ளனர்.
பின்னர், நேற்று காலை 9 மணிக்கு வீட்டினை தட்டி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். நகை, பணம் மற்றும் சில விலையுயர்ந்த பொருட்கள் என மொத்தமாக 100,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1