Paristamil Navigation Paristamil advert login

மோதல்களுக்கு தீர்வு காணும் புத்த மத கோட்பாடு: ராஜ்நாத்சிங்

மோதல்களுக்கு தீர்வு காணும் புத்த மத கோட்பாடு: ராஜ்நாத்சிங்

22 கார்த்திகை 2024 வெள்ளி 03:39 | பார்வைகள் : 1094


சர்வதேச அளவில் தற்போது நடந்து வரும் மோதல்கள் மற்றும் சவால்களுக்கு தீர்வு காண, புத்த மத கோட்பாடுகளை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்,'' என, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து உட்பட 10 நாடுகள் அங்கம் வகிக்கும், 'ஆசியான்' அமைப்பு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அமைச்சர்களின் மாநாடு, தென்கிழக்கு நாடான லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நடக்கிறது.

இதில் பங்கேற்ற நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

எல்லை பிரச்னைகள் உட்பட பலதரப்பட்ட சர்வதேச சவால்களை அணுகுவதில், இந்தியாவின் வெளிப்படையான அணுகுமுறை மற்றும் அமைதியான பேச்சுக்கான அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது.

எப்போதுமே வெளிப்படையான உரையாடல் நம்பிக்கை, புரிதல் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. நிலையான கூட்டாண்மைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது. உலக அரங்கில் ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்திற்கு பேச்சின் வாயிலாக கிடைக்கும் தீர்வு, உறுதியான முடிவுகளை அளிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் தற்போது நடந்து வரும் மோதல்கள் மற்றும் சவால்களுக்கு தீர்வு காண, புத்த மத கோட்பாடுகளை உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பவுத்தம் மக்களிடையே அமைதியான சக வாழ்வுக்கு மட்டுமின்றி, இயற்கையோடு மக்கள் இணைந்து வாழ்வதற்கும் ஒரு லட்சியத்தை உருவாக்கும்.

தன் வாழ்நாள் முழுதும், இயற்கையுடன் நெருக்கமான இணக்கத்துடன் வாழ்ந்தவர் புத்தர். பெரும்பாலும் காடுகளிலும், திறந்தவெளிகளிலும் போதித்தவர். பூமியுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கையை வலியுறுத்தியவர். இவ்வாறு அவர் பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்